நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினிகாந்த்! கொண்டாட்டத்தில் ஜெயிலர் 2 படக்குழு

ஜெயிலர் 2 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் நெல்சன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் ரூ.635 கோடிக்கும் மேல் வாரி குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. படத்தின் இசையை அனிருத் மேற்கொள்கிறார் மற்றும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் கேரளா பகுதியில் நடைப்பெற்ற நிலையில், இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில், தெலுங்கு நடிகர் பாலைய்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன் உள்ளிட்ட நட்சித்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படப்பிடிப்பு தளத்திலேயே தனது பிறந்தநாளை நெல்சன் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.