‘பார்க்கிங்’ படத்தை புகழ்ந்த இயக்குநர் நெல்சன்.

photo

இயக்குநர் நெல்சன் இன்று வெளியாகியுள்ள ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.


சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநரான ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் , படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் இயக்குநர் நெல்சன்.

அவரது எக்ஸ் பதிவில், பார்க்கிங் படம் சூப்பராக உள்ளது. எம்.எஸ் பாஸ்கர் சார், ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜாவின் நடிப்பு அருமையாக உள்ளது. இயக்குநர் ராம் குமார் தரமான படைப்பை கொடுத்துள்ளார். படம் வசூலை வாரி குவிக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Share this story