திருமாவளவனை சந்தித்த ஜெயிலர்பட இயக்குநர்

Nelson


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் நெல்சன். இவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டுள்ளார்.நிகழ்ச்சியின் ஓய்வு நேரத்தில் திருமாவளவன் வருகை குறித்து அறிந்து கொண்ட இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துள்ளார்.

nelson
இயக்குநர் நெல்சன் மற்றும் திருமாவளவன் சந்திப்பு குறித்த தகவலை விடுதை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன் இருவர் சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியான ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் நெல்சன் தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Share this story