புஷ்பா பட நடிகருடன் கூட்டணி அமைக்கும் நெல்சன்

புஷ்பா பட நடிகருடன் கூட்டணி அமைக்கும் நெல்சன்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அடுத்து, நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவானது. அனிருத் இசையில் பாடல்கள் அட்டகாசமாக உருவாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் இணைந்து படக்குழுவினரும் கொண்டாடினர். சுமார் 600 கோடிக்கு மேல் இத்திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. 

புஷ்பா பட நடிகருடன் கூட்டணி அமைக்கும் நெல்சன்

இந்நிலையில், நெல்சன் திலீப்குமார் தற்போது தெலுங்கு திரையுலகம் செல்வதாக தெரிகிறது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜூனை வைத்து புதிய படம் இயக்குவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Share this story