தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிசம் உள்ளது - ஆர்.ஜே.பாலாஜி
![தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிசம் உள்ளது - ஆர்.ஜே.பாலாஜி](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/2b604fe26641d8af4bf3eceda9efd314.jpg)
பிரபல ஆர்ஜேவான பாலாஜி, சினிமா நடிகராகி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி சலூன் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு ‘லியோ’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிசம் உள்ளதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எல்ஜிகே படத்தில் நடித்த போது எனது தயாரிப்பாளருக்கு, தற்போது நாயன்களாக உள்ள சில தயாரிப்பாளர்களின் மகன்கள் செல்போனில் அழைத்து அவரை ஏன் நடிக்க வைக்கிறார்கள் என கேள்வி எழுப்பியதாக கூறி உள்ளார்.