நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண ஒளிபரப்பு உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா. இவர் 2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'ஜோஷ்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை தந்துள்ளார். இன்று தெலுங்கு திரையுலங்கில் முக்கிய பிரபலமான நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த திருமணம் சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரம்பரிய முறைப்படி இந்த திருமணத்தை நடத்துவதற்கு இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்தில் நெருங்கியவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்கள். இதனிடையே நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்பிளக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண ஒளிபரப்பை வாங்கிய நெட்பிளக்ஸ் கடந்த 18-ந்தேதி அன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.