சென்சாருக்கு தலைவணங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம்
1702814514593

இன்றைய காலத்தில் டிஜிட்டல் தளங்கள் சினிமாத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிஜிட்டல் தளத்திற்காகவே பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஓடிடி தளமாக விளங்குகிறது நெட்பிளிக்ஸ். மற்ற ஓடிடி தளங்கள் மத்தியில் சென்சார் செய்யப்படாத படைப்புகளை அதிகம் வெளியிடும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்திய திரைப்படங்களை பொறுத்தமட்டில் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
தணிக்கை வாரியம் தந்த பதிப்பையே சர்வதேச அளவில் காட்சிக்கு வழங்கும் முடிவுக்கு நெட்ஃபிளிக்ஸ் வந்துள்ளது. அடுத்ததாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் படங்களில் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.