சார்….வெற்றிமாறன் சார்……. – பிரதீப் ரங்கநாதனை துவைத்தெடுத்த நெட்டிசன்கள்.

photo

விடுதலை படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

photo

ஜெயம் ரவி  நடித்த கோமாளிபடத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.  தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமான  படம் ‘லவ் டுடே’. படம்  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் வசூல் வேட்டையாடியது. குறிப்பாக இளைஞர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதன் வெற்றியை தொடர்ந்து படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் அதிரிபுதிரி ஹிட்டானது.

photo

இதனால் பிரதீப்புக்கு பல பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. இந்தநிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான ‘விடுதலை’ படத்தை பார்த்துவிட்டு அவர் போட்ட ட்வீட் ஒன்று அவருக்கே வில்லங்கமாக வந்துள்ளது. அதில் அவர் “விடுதலை படம் சூப்பராக இருந்தது. இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.  இதனை பார்த்த நெட்டிசன்கள்’ என்ன வெற்றிமாறன் என வெறும் பெயரை மட்டும் சொல்றீங்க, அவர் உங்களைவிட சீனியர் வெற்றிமாறன் சார் என கூறுங்கள், ஏதோ ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகிட்டா திமிரு வந்துடுமா?, வெற்றிமாறனை சார் என சொன்னால் குறைந்து விடுவீர்களோ. எனபது மாதிரியான கமெண்டுகளை பதிவிட்டு அந்த பக்கத்தையே போர்களமாக்கியுள்ளனர்.    

Share this story