பெண்கள் குறித்து உங்கள் கருத்து வேற லெவல் - அதிரடி கமெண்ட்களை பதிவு செய்த நெட்டிசன்கள்..!

11

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராமகோபால் வர்மா என்பதும் கடந்த 1989 ஆம் ஆண்டு ’சிவா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு பல வெற்றி படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரது படங்கள் தோல்வி அடைந்து கொண்டு வந்த நிலையில் அவர் திடீரென கிட்டத்தட்ட பலான படங்களை இயக்க ஆரம்பித்தார் என்பதும் குறிப்பாக அந்த படங்கள் இணையதளங்களில், ஓடிடியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக  இருக்கும் ராம்கோபால் வர்மா அவ்வப்போது சில சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு பெண் நியூஸ் பேப்பர் ஆடையை அணிந்திருப்பதை பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் ’ஒரு பெண்ணின் உள்ளத்தை யாராலும் படிக்க முடியாது, ஒரு பெண்ணின் மனதையும் யாராலும் படிக்க முடியாது’ என்றும் கூறியுள்ளார்.

அவரது இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. உங்களால் மட்டுமே இப்படியான புகைப்படங்களை பதிவு செய்ய முடியும் என்றும் நீங்கள் வேற லெவல் என்றும் இந்த புகைப்படத்தை எங்கே தேடி எடுத்தீர்கள் என்றும், ஆனால் பெண்கள் குறித்து உங்கள் கருத்து வேற லெவல் என பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share this story