சூப்பர் ஸ்டார் பாராட்டியுள்ள "கண்ணப்பா" படம் -கொட்டி தீர்த்த நெட்டிசன்கள்

kannappa

தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி உள்ள கண்ணப்பா என்கிற பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆகி  உள்ளது. இதில் பிரபாஸ், காஜல் அகர்வால், மோகன்லால், அக்‌ஷய் குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார் ,நெட்டிசன்கள் கருத்துக்கள் சிலவற்றையும் நாம் காணலாம் 

விஷ்ணு மஞ்சு, அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட கண்ணப்பா திரைப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்குமா என்பது  அந்த படத்துக்கு ரசிகர்கள் தரும் ஆதரவை பொறுத்து உள்ளது. 
காலஹஸ்தி கோயிலுக்குச் சென்றால் கண்ணப்பர் கோயிலுக்கும் பக்தர்கள் சென்று வருவது வழக்கம். வேடர் குலத்தை சார்ந்த கண்ணப்பா சிவலிங்கத்தின் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்து தனது கண்களை பிடுங்கி லிங்கத்துக்கு வைத்து தன்னுடைய மகத்தான பக்தியை வெளிப்படுத்தும் புராண கதை பலருக்கும் தெரிந்திருக்கும். அதை திரையில் பிரம்மாண்டமாக கொடுக்க வேண்டும் என்கிற பெருமுயற்சியில் வெற்றி கண்டுள்ள விஷ்ணு மஞ்சு படத்தில் கண்ணப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்றும் அதிலும் அந்த கிளைமேக்ஸ் காட்சியில் தனது கண்களை அம்பு வைத்து பிடுங்கி எடுக்கும் காட்சியெல்லாம் அல்டிமேட் என படத்தை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Share this story