வாடா ராசா... கென் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆல்பம் பாடல்!
கென் கருணாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய ஆல்பம் பாடலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது ஆல்பம் பாடல்கள் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. தமிழிலும் அதிகளவில் ஆல்பம் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே அஸ்வின் மற்றும் ரேபா மோனிகா நடிப்பில் வெளியான குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதையடுத்து கவின் மற்றும் தேஜு அஸ்வினி நடிப்பில் வெளியான ஆஸ்கு மாரோ பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது குட்டி பட்டாஸ் குழுவினர் மீண்டும் ஒரு புதிய பாடலுடன் களமிறங்க உள்ளனர். நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இந்த புதிய ஆல்பம் பாடலில் நடிக்க உள்ளார். பாடலுக்கு வாடா ராசா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தி ஷர்மா என்பவரும் இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இந்தப் பாடலை விவேக் என்பவர் இயக்குகிறார். கென் மற்றும் ஈஸ்வர் இருவரும் இசையமைத்துள்ளனர். சாண்டி டான்ஸ் கோரியோகிராப் செய்துள்ளார்.
ஆகஸ்ட் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தப் பாடல் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுரன் படத்தில் கென் கருணாஸ் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த ஆல்பம் பாடலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

