பாக்யராஜுடன் சோனியா அகர்வால் நடிக்கும் புது படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

sonia agarwal
சோனியா அகர்வால், கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிதா லிவிங்ஸ்டன், ‘அருவி’ மதன், அமுதவாணன், ஆதர்ஷ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கேரக்டரில் அறிமுகமாகும் படம், ‘டார்க் ஜெயண்ட்’. இதை கே.எஸ்.கிஷன் இயக்குகிறார். சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவு செய்ய, விக்னேஷ் ராஜா இசை அமைக்கிறார்.
பயோவன் கிரியேஷனிசம் சார்பில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்திலும், சென்னையிலும் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. மாறுபட்ட ஹாரர் திரில்லர் கதை கொண்ட இப்படம், வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. பர்ஸ்ட் லுக் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல் விரைவில் வெளியாகிறது.

Share this story