பிப்ரவரி 13ம் தேதி திரைக்கு வரும் தமன்னா நடித்த புதிய படம் -என்ன டைட்டில் தெரியுமா ?
1768444209000
பாலிவுட் முன்னணி இயக்குனர் விஷால் பரத்வாஜ், ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி உருவாக்கிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. ‘ஓம்காரா’ (ஒதெல்லோ நாடகம்), ‘மகபூல்’ (மாக்பெத் நாடகம்), ‘ஹைதர்’ (ஹாம்லெட் நாடகம்) ஆகிய படங்கள் கிளாசிக் ரகம். தற்போது அவர் ‘ஓ ரோமியோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ரோமியோ ஜூலியட் நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஹைதர்’ என்ற படத்தில் நடித்திருந்த ஷாஹித் கபூர், மீண்டும் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். ஹீரோயினாக திரிப்தி டிம்ரி நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் தமன்னா, நானா படேகர், பரிதா ஜலால், அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் படமான இதன் டீசர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. வரும் பிப்ரவரி 13ம் தேதி படம் திரைக்கு வருகிறது. முன்னதாக இதில் திரிப்தி டிம்ரி ஹீரோயினாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியான டீசரில் தமன்னா, திஷா பதானி ஆகியோரும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், ‘ஓ ரோமியோ’ படத்தில் ஷாஹித் கபூர் ஜோடியாக 3 முன்னணி நடிகைகள் நடிக்கிறார்களா என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டுள்ளனர்.