அடுத்த படத்தில் அஜித் -புது தோற்றத்தில் நடிக்கிறாரா ?

நடிகர் அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஆவார் .இவர் நடித்த பல படங்கள் வசூலை அள்ளியது .இவர் சமீபத்தில் மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோ சமூக ஊடகத்தில் வெளியாகி பரபரப்பினை உண்டு பண்ணியுள்ளது .ஒருவேளை இது அடுத்த படத்திற்கான தோற்றமாக இருக்குமோ என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்
அஜித், தனது வேதாளம் படத்திலும் இதே போன்ற ஒரு தோற்றத்தில்தான் இருந்தார். எனவே, அடுத்த படமும் அது போன்ற ஒரு ரௌடி-கேங்க்ஸ்டர் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் குமாருக்கு இந்த ஆண்டு, தோல்வி-வெற்றி இரண்டையும் தேடி தந்தது. பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸிலும் விமர்சனத்திலும் சொதப்ப, அடுத்ததாக வெளியான குட் பேட் அக்லி பெரிய ஹிட் அடித்தது.
அஜித், அடுத்து எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது. அவரது 64வது படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித், தற்போது ஒரு கார் ரேசிங்கில் கலந்து கொள்ள இருக்கிறாராம். அதன் பிறகு இவரும் ஆதிக்கும் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அஜித் குமார், தற்போது தனது தோற்றத்தையே மாற்றி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெயிட் லாஸ் செய்த அவர், தற்போது முடியையும் மொட்ட கட் செய்திருக்கிறார். இதனால், இந்த தோற்றம் அடுத்த படத்திற்கானதாக இருக்குமோ என்ற்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.