இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

photo

தியேட்டருக்கு போய் படம் பார்பதை விட பலரும் வீட்டில் இருந்தபடியே படம் பார்க்க விரும்புகிறார்கள். அதனால்தான் தியேட்டரை விட ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை வரிசைக்கட்டி நிற்கின்றன. அதுவும் தற்போது கோடை விடுமுறை வேறு…… அதனால் கொண்டாட்டமோ கொண்டாட்டம்தான். இந்த நிலையில் இன்று என்னென்ன படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில்  ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்:

photo

சொப்பன சுந்தரி:  ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்மைய்ய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த திரைப்படம் சொப்பன சுந்தரி.  சார்லஸ் இயக்கத்தில் உருவான இந்த படம் டார்க் காமெடி ஜானரில் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

photo

யாத்திசை: பாண்டியர் மன்னனான இரணதீரன் பாண்டியனின்  வரலாறு குறித்து எடுக்கப்பட்ட படமான யாத்திசை இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு மக்கள் பெரும் ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

ருத்ரன்: ராகவாலாரன்ஸ் நடிப்பில் வெளியான் திரைபடம் ருதரன். வைவ்ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மே 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

photo

சகுந்தலம்: தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சகுந்தலம். புராண கதையை மைய்யமாக வைத்து தயாரான இந்த படத்தில் சகுந்தலையாக நடித்திருந்தார் சமந்தா. இயக்குநர் குணசேகர் நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

photo

திருவின் குரல்: அருள்நிதி, பாரதிராஜா இணைந்து நடித்துள்ள திருவின்குரல் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.தெய்வ மச்சான்: மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாரான தெய்வமச்சான் திரைப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் இன்று டெண்ட்கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Share this story