லால் சலாம் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்

லால் சலாம் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்

லைக்கா நிறுவன தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘லால்சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மொய்தீன் பாய் எனும் கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கேமியோ ரோல் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபல கிரிக்கெட்டரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.  படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

லால் சலாம் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்

இந்நிலையில், லால் சலாம் படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகின்றன.  வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

Share this story