வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்
1704195775498

இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் 'வள்ளி மயில்' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பாரதிராஜா, சத்யராஜ் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டி இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 80-களின் நாடகக்கலை பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.