‘வாரிசு’ படத்திற்கு புதிய சிக்கல்- ஏழு நாட்கள் கெடு.

photo

தமிழில் ‘வாரிசு’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் படத்தை  பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், இவர்களோடு சேர்த்து முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

தொடர்ந்து படத்திற்கு திரையரங்கம் ஒதுக்குவது தொடர்பாக  பல சர்சைகள் எழுந்த நிலையில் தற்பொழுது  புது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்த போது , அதில் யானைகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளை முறையாக அனுமதியில்லாமல் படக்குழு பயன்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியானது.

photo

தற்பொழுது  'வாரிசு படக்குழுவுக்குஇந்திய விலங்குகள் நல வாரியம்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதாவது ‘படப்பிடிப்புக்கு அனுமதியின்றி விலங்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக புகார் வந்துள்ளது எனவே இது  தொடர்பாக 7 நாட்களில் விளக்கம்  அளிக்க வேண்டும்’ என படக்குழுவிற்கு அதிரடியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

photo

Share this story