கவனம் ஈர்க்கும் ப்ளடி பெக்கர் படத்தின் புதிய ப்ரோமோ
1730282723000
இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்திறகு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 30 நிமிடங்களாகும். இந்நிலையில் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நாயகன் கவின் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்வது போன்ற காட்சி இடம்பெற்று இருக்கிறது.