புதிய சாதனை... 'எம்புரான்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா...?

empuraan

மோகன்லால் நடித்துள்ள  'எம்புரான்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 


மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் `எல்2; எம்புரான்' என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார்.  பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில்இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக நேற்று  வெளியானது. கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

mohanlal
இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான நேற்று 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வெளியான 'ஆடு ஜீவிதம்' இருந்தது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் அதிகபட்சமாக 8.95 கோடி ரூபாய் இந்தியா முழுவதும் வசூல் செய்தது. 'லூசிஃபர்' முதல் நாளில் 6.10 கோடி ரூபாய் வசூலை கடந்து 2019ம் ஆண்டு முதல் நாள் வசூலாக இருந்தது. இந்த வசூலையெல்லாம் கடந்து ’எம்புரான்' முதல் நாளில் வசூலில் சாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this story

News Hub