போர் படத்திலிருந்து புதிய பாடல்

போர் படத்திலிருந்து புதிய பாடல்

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் போர் திரைப்படம். இந்த படத்தில் கலக்கல் நடிகர்களான அர்ஜுன் தாஸும், காளிதாஸும் இணைந்து நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் இந்த படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் இந்திப் பதிப்பில், ஹர்ஷ்வர்தன் ராணே, எஹான் பட் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் போஸ்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

போர் படத்திலிருந்து புதிய பாடல்

இப்படத்தின் முன்னோட்டம் வௌியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை இப்பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Share this story