தி ரோட் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

தி ரோட் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படத்திலிருந்து நகராத நொடியோடு என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் “தி ரோட்” திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு “தி ரோட்” திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “திரிஷா” மற்றும் “சார்ப்பட்டா” புகழ் டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “தி ரோட்”. இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. 

இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது நகராத நொடியோடு என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 6-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this story