கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்திலிருந்து புதிய காணொலி வெளியானது

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்திலிருந்து புதிய காணொலி வெளியானது

தேசிய விருதுபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்த படத்தை ‘கேஜிஎப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.  இந்த படம் நகைச்சுவை பட மட்டுமின்றி, தைரியமிக்க, துணிச்சலான பெண் தன் கொள்கைகளுக்காக நடத்தும் போராட்டத்தில் தன் தனித்துவத்தை கண்டுக்கொள்ளும் களம்தான்.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோ வீடியோ ஒன்றைபடக்குழு வெளியிட்டு உள்ளது. இது வைரலாகி வருகிறது.   

Share this story