புதிய காணொலியை வெளியிட்டது ரத்தம் படக்கழு

புதிய காணொலியை வெளியிட்டது ரத்தம் படக்கழு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ரத்தம் திரைப்படத்திலிருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இன்பினிட்டி ஃப்லிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் ‘தமிழ் படம்’,’தமிழ் படம்2’ மூலமாக சினிமாவை கலாய்த்த சி.எஸ் அமுதன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. அரசியல் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடைய, படத்திலிருந்து அறிவு எழுதி பாடிய ஒரு நாள் என்ற பாடலும் வெளியாகி வைரல் ஆனது.

null


இந்நிலையில், படத்தில் நாயகியாக நடிக்கும் மஹிமா நம்பியார் நடனமாடும் காணொலி ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 
 

Share this story