புத்தாண்டு ஸ்பெஷல் : ‘ரெட்ரோ’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக இவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்துக்கு ரெட்ரோ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் வெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
Happy #Retro New Year 2025 👍❤️ pic.twitter.com/RZqhrBsECC
— karthik subbaraj (@karthiksubbaraj) January 1, 2025
சமீபத்தில் தான் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்த படமானது அடுத்த ஆண்டு கோடையில் திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. காதல் சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 1) புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.