சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா ?

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மதராசி என்ற படமும் விரைவில் வெளியாக உள்ளது .இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை இயக்க போவது எந்த டைரக்டர் என்ற தகவல் வெளியாகியுள்ளது .
இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா மற்றும் சென்னை 28 போன்ற படங்களையும் சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து  தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் 
 (கோட்)என்ற படத்தை இயக்கினார் . 
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கவை .இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க போகிறாராம் .சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி போன்ற படங்களில் நடித்து வருகிறார் .அது மட்டுமல்லாமல் அவர் நடித்து அமரன் மற்றும் டான் ,போன்ற படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது .இப்படி வெற்றி பட இயக்குனரும் ,வெற்றி பட நாயகனும் ஒன்று சேருவதால் இவர்களின் படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது .இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.  .இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் .

Share this story