"மகாராஜா" இயக்குனரின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா ?

maharaja
சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படத்தில்  விஜய் சேதுபதி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்திருந்தனர் .இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது .இப்படத்தை இயக்கிய நித்திலனுக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது .இப்படம் பல மொழிகளில் வெளியாகி அங்கும் வெற்றி திலகமிட்டது குறிப்பிடத்தக்கது .அந்த மகாராஜா இயக்குனர் நித்திலனின் அடுத்த படத்தில் ஹீரோ யார் என்று புதிராக இருந்தது .இப்போது அந்த புதிருக்கு விடை கிடைத்துள்ளது .அவரின் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி – நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. தமிழில் மட்டுமல்லாது சீனா வரை இப்படம் வசூலைக் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய வணிகத்தைக் கொடுத்தது.
இந்த மகாராஜா படம்  ஓடிடியிலும்  வெளியாகி உலகளவில் கவனம்பெற்றதுடன் ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாளர் அலெக்ஸாண்டர் டெனலாரிஸ், நித்திலனை நேரில் அழைத்துப் பாராட்டினார். அடுத்தாக, நித்திலன் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து புதிய படத்தை இயக்குவதாகக் கோலிவுட்டில் ஒரு தகவல் உலா வந்தது 
ஆனால், இப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நித்திலன் மீண்டும் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படமும் மகாராஜா போல் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துவோம் 

Share this story