அஜித்தின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பாளர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம் !

chakravarthy

அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் சக்கரவர்த்தி. தனது நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து வெற்றிக்கண்டவர். குறிப்பாக அஜித்தின் ஆரம்ப காலத்தில் வெற்றி பெற்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் தான் தயாரித்தார். அதோடு அஜித்தின் நெருங்கிய நண்பராக நீண்ட காலமாக இருந்து வருகிறார்.‌

chakravarthy

ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு என 9 அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்தவர்.‌ இதுதவிர விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்புவின் காளை ஆகிய படங்களையும் தயாரித்தார். கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விலங்கு வெப் தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். 

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் சக்கரவர்த்தி கடந்த சில ஆண்டுகளாக அந்நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகரித்ததால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது திடீர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சக்கரவர்த்தியின் மரணத்தையொட்டி திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. 

Share this story