கர்ப்பம்குறித்துஉண்மையைவெளியிட்ட‘நிக்கிகல்ராணி’

photo

சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த நடிகை நிக்கி கல்ராணி தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த நிலையில், அந்த தகவல் குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பேசியிருக்கிறார் நிக்கி.

photo

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணியாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம், டார்லிங் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

photo

அதே போன்று தமிழ் சினிமாவில் 'மிருகம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. தன்னுடைய முதல் படத்திலேயே மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இதை தொடர்ந்து, ஈரம், ஆடு புலி, அய்யனார், அரவான், கோச்சடையான், என பல படங்களில் நடித்தார்.

photo

ஆதி மற்றும் கல்ராணி இருவரும்  கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், திரையுலகில் இருந்து விலகிய நிக்கி கல்ராணி குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே, நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக  தகவல் காட்டு தீயாக பரவியது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது நிக்கி கல்ராணி... தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவல்  குறித்த செய்திக்கு பதிலாக ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்தான் கர்பமாக இருப்பதுதான் சமீபத்தில்  பெரிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது. இப்படி பரவும் தகவலில் உண்மை இல்லைஎன தெரிவித்துள்ளார்.

photo

இந்த பதிவின் மூலமாக நிக்கி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this story