‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் அடுத்த பாடல்.. தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்!
தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் குபேரா போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இதற்கிடையில் இவர், பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக உருவெடுத்தார். அதைத்தொடர்ந்து ராயன் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். பின்னர் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தினை உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
லியோன் பிரிட்டோ இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அதேசமயம் இந்த படத்தில் இருந்து கோல்டன் ஸ்பேரோ எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் செம வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலிருந்து காதல் ஃபெயில் எனும் soup song வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தனுஷின் குரலில் உருவாகியுள்ளது. எனவே இந்த பாடலும் கோல்டன் ஸ்பேரோ பாடலைப் போல் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.