நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 'ஏடி' வீடியோ பாடல் ரிலீஸ்...!

yedi

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 'ஏடி' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. 

ப.பாண்டி, ராயன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் இயக்கத்தில் வெளியான  படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. உண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து உள்ள இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.



இப்படத்தில் இடம் பெற்ற ‘கோல்டன் -ஸ்பாரோ பாடல் ’ நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற  'ஏடி' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.  ஜி. வி. பிரகாஷ் இசையமைப்பில் விவேக் எழுதிய இப்பாடலை தனுஷ் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.

 

 

 

Share this story