"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படத்தின் ப்ரோமோ வெளியீடு

தனுஷ் இயக்கியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படம் வரும் 21-ந் தேதி வெளியாக உள்ளது.
தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
Promo No.2 from #Neek ❤️❤️❤️#NEEKFromFeb21#DD3 #NilavukuEnMelEnnadiKobam
— Wunderbar Films (@wunderbarfilms) February 15, 2025
A #Dhanush Directorial 🎬
A @gvprakash musical 🎶 @dhanushkraja @wunderbarfilms @RedGiantMovies_ @MShenbagamoort3 @siddshankar_ @RsquaredRams @Mathewthomass__ @editor_prasanna #LeonBritto… pic.twitter.com/SPKVdxwNC7
இந்த படத்தின் முதல் பாடலாக ’கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியானது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடல் சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தனுஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.