தனுஷின் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" பாட்டு ரெடி...ஜி.வி பிரகாஷ் அப்டேட்

NEEK

ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் இரண்டு படங்களில் இயக்க இருக்கிறார். நித்யா மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடிக்கும் படத்தை தனுஷ் இயக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இதனையடுத்து தனுஷ் இயக்கும் டீன் டிராமா தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படத்தினை இவரது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.



இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். ராயன் படத்தை அதிரடியான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இயக்கிய தனுஷ் இந்தப் படத்தை மென்மையான காதல் படமாக இயக்கி வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடலின் ஃபைனல் மிக்ஸ் முடிந்துவிட்டதாகவும் தனுஷூடன் சேர்ந்து ஒரு ஸ்பெஷலான பாடலை உருவாக்கி இருப்பதாகவும் இந்த பாடல் விரைவில் வெளியாகும் எனவும் ஜிவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.’

NEEK
இப்படத்திற்கு தனுஷூடன் சேர்ந்து புதுமையான பாடல்களை உருவாக்கி இருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் தனுஷூடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து ஜி.வி பேசுகையில்  “ தனுஷூடன் சேர்ந்து பணியாற்றுவது ஒரு மேஜிக்கலான அனுபவமாக இருக்கும்.

தனுஷ் ஒரு பாடலுக்கான ஐடியாவை என்னிடம் சொல்வார் பின் நாங்கள் இருவரும் அதை பேசி ஒரு பாடலை உருவாக்குவோம்.  ராஜா ராணி படத்தில் ஒரு ஜி.வியை நீங்கள் பார்த்தீர்கள். அதே போல் மயக்கம் என்ன படத்தில் ஒரு ஜிவி. இந்த படத்தில் நீங்கள் இளமையான ஒரு ஜி.வி பிரகாஷை பார்ப்பீர்கள்“ என்று ஜி.வி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

Share this story