நிதின் சத்யா நடிப்பில் ‘கொடுவா’.. மோஷன் போஸ்டர் வெளியீடு !

koduvaa
 நிதின் சத்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கொடுவா’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக போராடி வரும் ஹீரோக்களில் ஒருவர் நிதின் சத்யா. முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதையடுத்து புதிய படத்தின் மூலம் கதாநாயகனாக நிதின் சத்யா நடித்து வருகிறார்.

koduvaa

‘கொடுவா’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் சாத்தையா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நிதின் சத்யாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஷான் நடிக்கிறார். தரண்குமார் இசையில் உருவாகும் இப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை துவாரகா ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story