"எனக்கு புகழை விட தன்மானமே முக்கியம் "-நித்யா மேனன் பேட்டி

nithya-menen

தனது 8வது வயதில், ‘ஹனுமான்’ என்ற ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நித்யா மேனன். பெங்களூரில் பிறந்து வளர்ந்த அவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சி காட்டி நடிக்க விரும்பாத அவர், நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்களை தேர்வு செய்கிறார். தனுஷுடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற அவர், இனிய குரல் வளம் கொண்ட பாடகியாகவும் இருக்கிறார்.
அதோடு, விரைவில் படம் இயக்கவும் ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில், சக நடிகைகளுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘படங்களில் பெண்கள் கவர்ச்சியாக சித்தரிக்கப்படுவது தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் இருந்து வருகிறது. பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக்காக எல்லை மீறும் காட்சிகளை தவிர்க்க, நடிகைகளே துணிச்சலுடன் மறுக்க வேண்டும். புகழைவிட தன்மானமே முக்கியம். நடிகைகள் ஆரம்பத்தில் இருந்தே தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும்.
நான் சில வகையான படங்களில் நடிக்க விரும்பாததால், நிறைய வாய்ப்புகளை தவறவிடுகிறேனா என்று கேட்டால், அதற்கு எனது பதில், ‘ஆமாம்’ என்பதுதான். ஆனால், அதுபற்றி நான் கவலைப்படுவது இல்லை. காரணம், புகழைவிட தன்மானத்தையே நான் தேர்ந்தெடுக்கிறேன்’ என்றார்.

Share this story