தேசிய விருதை வென்ற மகிழ்ச்சியை குடும்பத்துடன் பகிர்ந்த நித்யா மேனன்
1728812719000

70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா அண்மையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்றது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக் கொண்டனர். சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார். விருது வாங்கிய மகிழ்ச்சியை அவரது பெற்றோருடன் பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது நித்யா மேனன் தன் பெற்றொருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.