நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் நிறைய பரோட்டா சாப்பிட்டேன்- நித்யா மேனன்
‘தலைவன் தலைவி' படத்துக்காக மட்டுமல்ல.. படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் நிறைய பரோட்டா சாப்பிட்டேன் என நடிகை நித்யா மேனன் கூறினார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகை நித்யா மேனன், “ரொம்ப வருஷம் கழிச்சு மதுரையிலதான் பரோட்டா சாப்பிட்டேன். மதுரையில் ஷூட்டிங் நடந்தபோது, நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் நிறைய பரோட்டா சாப்பிட்டேன். அத்துடன் பரோட்டா போடவும் கற்றுக்கொண்டேன். ‘தலைவன் தலைவி' படத்துக்காக மட்டுமல்ல.. படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் நிறைய பரோட்டா சாப்பிட்டேன். எங்க வீட்ல மதத்தைப் பற்றியோ, ஜாதிப் பற்றியோ பேசினதே கிடையாது. காஸ்ட் ரீதியாக நாங்க 'MENEN' தான். ஆனா, என்னுடைய பேர்ல அது கிடையாது. எங்க அப்பாவுக்கு பெயர் பின்னாடி ஜாதிப் பெயர் போடறது பிடிக்காது.
வலுவான பெண் கதாபாத்திரத்துடன் நடிப்பதை நடிகர்கள் விரும்புவதில்லை. ஹீரோவை மட்டுமே மையமாக கொண்டு அல்லாமல் கதாபாத்திரத்தை மையமாக கொண்டுள்ள ‘தலைவன் தலைவி' படத்தை தேர்ந்தெடுத்தற்காக விஜய் சேதுபதியை நான் பாராட்டுகிறேன்” என்றார்.

