"சாணத்தை கைகளால் சுத்தம் செய்த நித்யா மேனன்"-எந்த படத்திற்காக தெரியுமா ?

nithya-menen
பிரபல நடிகை நித்யா மேனன் நித்யா மேனன் ஒரு நடிகை மற்றும் பின்னணிப் பாடகி ஆவார், இவர் முக்கியமாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார் . அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் "ஆகாச கோபுரம்" (2008), தெலுங்கில் "அல மொதலயிந்தி" (2011),  போன்ற படங்களில் நடித்துள்ளார் .மேலும் இவர் தேசிய திரைப்பட விருது, நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்ததற்காக 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
இவர் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார் .அடுத்து மீண்டும் தனுஷுடன் இட்லி கடை படத்தில் சேர்ந்து நடித்து வருகிறார் .இந்த படம் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது .இட்லி கடை படத்தில் நடித்தது குறித்து நித்யா மேனன் ஒரு தகவலை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார் 
"'இட்லி கடை படத்தில் சாணத்தை என் கைகளால் சுத்தம் செய்தேன். முதல் முறையாக அதை செய்தேன். சொல்லப்போனால், தேசிய விருது வாங்க செல்வதற்கு ஒரு நாள் முன்பு,அந்தக் காட்சியை செய்தேன். தேசிய விருதைப் பெறும்போது, என் விரல் நகங்களில் மாட்டு சாணம் இருந்தது. அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது'' என்றார்.

Share this story