மிரட்டலான லுக்கில் நிவின் பாலி... 'ஏழு கடல் ஏழு மலை' ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

nivin

நிவின் பாலி நடிப்பில் உருவாகும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

  ‘நேரம்’ படத்திற்கு பிறகு பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி, தனது இரண்டாவது தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கிய வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 ‘நேரம்’ படத்திற்கு பிறகு பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி, தனது இரண்டாவது தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கிய வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தனுஷ்கோடி, வண்டிப்பெரியார், வாகமன் உள்ளிட்ட கேரளா ஒட்டியுள்ள பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.  இதையடுத்து தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ‘ஏழு கடல் எழு மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நிவின் பாலி மிரட்டலான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தனுஷ்கோடி, வண்டிப்பெரியார், வாகமன் உள்ளிட்ட கேரளா ஒட்டியுள்ள பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ‘ஏழு கடல் எழு மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நிவின் பாலி மிரட்டலான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story