நிவின் பாலி - நயன்தாரா நடித்த 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு நிறைவு...!

நிவின் பாலி - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு...!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் 'லவ் ஆக்ஷன் டிராமா. படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
It’s a wrap! 😊
— Nivin Pauly (@NivinOfficial) March 23, 2025
Thank you, team. ❤️ #DearStudentsMovie#Nayanthara @PaulyPictures #VineetJain #Maverikmovies #therowdypictures @Sandeepkumark1p @GeorgePhilipRoy @AnendCChandran #ShinosShamsudheen pic.twitter.com/olYoRrfG5L
தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர். பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.