ரிலீசுக்கு தயாராகும் ‘ஏழுகடல் ஏழு மலை’... முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு !

YezhuKadalYezhuMalai

 நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி, ‘நேரம்’ படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார்.  அந்த வகையில் தனது இரண்டாவது தமிழ் படத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

YezhuKadalYezhuMalai

இந்த படத்தை கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கிய வருகிறார். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

YezhuKadalYezhuMalai

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தனுஷ்கோடி, வண்டிப்பெரியார், வாகமன் உள்ளிட்ட கேரளா ஒட்டியுள்ள பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. 


 

 

Share this story