கோட் ரீமேக் படம் இல்லை, இயக்குநர் விளக்கம்

கோட் ரீமேக் படம் இல்லை, இயக்குநர் விளக்கம்

தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது திரைப்படங்களுக்கு குட்டி சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்கள். விஜய்யின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது நடனம், ஸ்டைல் மற்றும் குரலுக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். அதில், சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கோட் திரைப்படம் ஆங்கில படத்தின் ரீமேக் என்று அண்மையில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜெ பேபி பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, கோட் திரைப்படம் ஒரு ரீமேக் படம் அல்ல,என்று தெரிவித்துள்ளார்.

Share this story