நாய்கள் பின்னணியில் உருவாகியுள்ள த்ரில்லர் படம்.. ஆண்ட்ரியாவின் ‘நோ என்ட்ரி’ டிரெய்லர் !

ஆண்ட்ரியாவின் ‘நோ என்ட்ரி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’. முழுக்க முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பாக ஏ.ஸ்ரீதர் தயாரித்துள்ளார்.
அறிமுக அழகு கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ், ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல் 'மானாட மயிலாட' மானஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சிரபுஞ்சியை சுற்றியுள்ள காடுகளிகளில் நடைபெற்றுள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வைரஸ் செலுத்தப்பட்டுள்ள நாய்களின் பின்னணி உருவாகியுள்ள த்ரில்லர் படம் இது. இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.