யாரும் எங்கிட்ட இப்படி கேட்டதில்ல.. விஜய் குறித்து மனம் திறந்த ராதா ரவி..!

radha ravi

 தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் நடிப்பில் வெளி வந்த கோட் திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்த நிலையில் விஜய் தற்போது கடைசி படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நலையில் தமிழக அரசியலில் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்க திட்டமிட்டு இருக்கும் விஜய், அதற்கென கட்சி ஒன்றை ஆரம்பித்து உறுப்பினர்களை விரைவாக சேர்த்து வருவதோடு முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். தளபதி விஜய் பொருத்த வரை அவர் சர்க்கார் திரைப்படத்தில் ராதாரவியோடு இணைந்து நடித்திருக்கிறார். அப்போது அந்த படத்தில் விஜய்க்கும் ராதா ரவிக்கும் இடையே சில உரையாடல்கள் நடந்து இருக்கும். அந்த உரையாடல்களை நினைவு கூறும் விதமாக தற்போது இணையங்களில் சில செய்திகள் வெளி வந்துள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே ராதாரவியும் விஜயும் இணைந்து பிரண்ட்ஸ் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்கள். மேலும் சர்க்கார் படத்தில் ராதாரவியோடு இணைந்து நடிக்கும் போது விஜய், ராதாரவி தனியாக அழைத்துப் பேசி இருக்கிறார் அப்படி அவர் பேசும் போது தான் அவரிடம் இது வரை யாரும் கேட்காத அந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.


அதாவது ராதாரவியின் அப்பா எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்ட சமயத்தில் அந்த நேரத்தில் உங்கள் வீட்டில் இருந்தவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்று இது வரை யாரும் கேட்காத கேள்வியைத்தான் தளபதி விஜய் ராதாரவி இடம் கேட்டிருக்கிறார். மேலும் எம்ஜிஆர் எதற்காக சுட்டார்! என்ன காரணம்? எதனால் கோபம் ஏற்பட்டது என்று அடுக்கடுக்காக கேள்விகளை பலர் கேட்டிருக்க அந்த சமயத்தில் வீட்டில் உள்ளவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்ற யாருமே கேட்காத கேள்வியை கேட்டவர் தான் தளபதி விஜய் என்று சொன்னார் அது மட்டுமல்லாமல் தளபதி விஜய் அரசியலுக்கு வருவது பற்றி அதிகம் பேசாத அவர் யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம் விஜய்க்கும் அந்த தகுதி இருக்கிறது என்று பேசினார்.

 
 
 

Share this story