என் உணர்வுகளுக்கு யாரும் மதிப்பளிக்கவில்லை...வதந்திகளுக்கு வருத்தம் தெரிவித்த நடிகை சிம்ரன்..

simran

நடிகை சிம்ரன் தயாரிப்பில் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு நடிகை சிம்ரன் தற்போது வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழ் சினிமாவின் எவர்கிரீண் நடிகைகளில் ஒருவர் சிம்ரன். சமீப காலங்களில் இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தோன்றியுள்ளார். தான் முன்னணி நடிகையாக இருந்த காலத்தில் நடித்த நடிகர்களுடன் மீண்டும் திரையில் நடிக்கத் தொடங்கியுள்ள சிம்ரன் கோலிவுட்டில் இன்னொரு ரவுண்ட் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக சமீபத்தில் வெளியான பிரசாந்தின் அந்தகன் திரைப்படம் இதற்கு அடிகல் நாட்டியது. அடுத்தபடியாக சிம்ரன் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. மேலும் சிம்ரன் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் அவர் விஜயை வைத்து   ஒரு படம் தயாரிக்க விரும்பியதாகவும் ஆனால் விஜய் மறுத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து நடிகை சிம்ரன் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். 

 

null


 
தனது பதிவில் சிம்ரன் " தவறான செய்திகள் மூலம் மக்களால் நம்மை எவ்வளவு எளிதாக சீண்டிவிட முடிகிறது. நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள் கூட அதைப்பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பது தான் பெரிய வருத்தம். நான் இதுவரை மெளனமாக இருந்துவிட்டேன். ஆனால் இனிமேலும் இருக்க மாட்டேன். நான் எந்த பெரிய நடிகருடன் சேர்ந்தும் பணியாற்ற வில்லை. நான் ஏற்கனவே அதை செய்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு பெண்ணாக என்னுடைய இலக்கு வேறு. எனக்கென சில எல்லைகலை நான் வரையறை செய்து வைத்திருக்கிறேன். எத்தனையோ நடிகர்களுடன் என்னுடைய பெயர் இணைத்து பேசப்பட்ட போது எல்லாம் நான் அமைதியாக இருந்திருக்கிறேன். ஆனால் போதும் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என இந்த தருணத்தில் நான் கறுகிறேன். என்னுடைய சுய மரியாதை தான் எனக்கு முக்கியம் . யாரும் முன்வந்து இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கவில்லை.என் உணர்வுகளுக்கு யாரும் மதிப்பளிக்கவில்லை. எனக்கு கிடைத்த அடையாளத்தை நான் எப்போதும் தவறாக பயண்படுத்தியதில்லை. எது சரியோ அது பக்கமே நின்றிருக்கிறேன். அதே அளவிற்கான கன்னியத்தை நான் எல்லாரிடமும் எதிர்பார்க்கிறேன். இந்த வதந்திகளை பரப்பியவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்" என சிம்ரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this story