நூறு கோடி வானவில்லாய் மாறிய ஹரிஷ் கல்யாண் - சித்தி இத்னானி... படத்தின் முக்கிய அறிவிப்பு !
தமிழ் சினிமாவில் ‘பூ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சசி. இந்த படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியை வைத்து பிச்சைக்காரன் படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை வைத்து உருவான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் கூட்டணியில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கினார்.

இந்த படமும் வெற்றிப்பெற தற்போது நான்காவதாக புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘நூறு கோடி வானவில்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

