ஒன்றல்ல... ரெண்டல்ல...7 மொழிகளில் ரிலீஸ் ஆகும் த்ரிஷாவின் அடுத்த படம்..!

1

நடிகை த்ரிஷா தற்போது கமல்ஹாசனுடன் ’தக்லைஃப்’, அஜித்துடன் ’விடாமுயற்சி’ சிரஞ்சீவி உடன் ’விசுவாம்பரா’, மோகன்லாலுடன் ’ராம்’, மற்றும் டொவினோ தாமஸ் உடன் ’ஐடெண்டிட்டி’ ஆகிய முன்னணி நடிகர்களின்  படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் த்ரிஷா நடித்த ’பிருந்தா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராகி சில வருடங்கள் ஆன போதிலும் இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ’பிருந்தா’ திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் மராத்தி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த படத்தில் த்ரிஷாவுடன் இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.  


 


 

Share this story