பிரபல கலை இயக்குநர் மிலன் மறைவு... திரைப்பிரபலங்கள் இரங்கல்...

பிரபல கலை இயக்குநர் மிலன் மறைவு... திரைப்பிரபலங்கள் இரங்கல்...

மகிழ்திருமேனி இயத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்புக்காக அஜித் மட்டுமன்றி த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரும் அஜர்பைஜான் பறந்தனர். கலை இயக்குநர் மிலனும் அவர்களுடன் அஜர்பைஜான் சென்றிருந்தார். 

பிரபல கலை இயக்குநர் மிலன் மறைவு... திரைப்பிரபலங்கள் இரங்கல்...

இந்நிலையில், இன்று காலை விடாமுயற்சி படப்பிடிப்புக்காக ஓட்டல் அறையில் தயாராகிக் கொண்டிருந்தபோது, திடீரென கலை இயக்குநர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக படக்குழுவினர் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை தரப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலன் இல்லாமல், மிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், விடாமுயற்சி படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

Share this story