தக் லைஃப் படத்தின் `ஓ மாறா' லிரிக் வீடியோ ரிலீஸ்...!

தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள `ஓ மாறா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
#OMAARA Lyric video out now
— Raaj Kamal Films International (@RKFI) May 27, 2025
➡️ https://t.co/AXciuTeQZR#ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact @C_I_N_E_M_A_A #Nasser… pic.twitter.com/P91td6cCN8
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள ஓ மாறா பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியிடுகிறது. இப்பாடலை பால் டப்பா எழுதி எழுதி பாடியுள்ளார்.