‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு டான்ஸ் போடும் பிரபல நடிகை.. வைரல் வீடியோ !
கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 ஆகியே படங்களில் நடித்தார். இந்த படங்களுக்கு பிறகு சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் வாய்ப்புகளை தொடர்ந்து தேடி வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா ஐட்டம் பாடல் ஒன்றிற்கு நடனமாடினார். இந்த பாடல் மிகவும் பிரபலமாகியுள்ள நிலையில் ஷாலு ஷம்மு, இந்த பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

